இலங்கையின் முக்கிய சுற்றுலா தலங்கள் தாக்கப்படலாம் ; அமெரிக்கா அவசர அறிவிப்பு
திருக்கோணமலையில் நேர்ந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த பெண்
திருகோணமலை – கந்தளாய் பகுதியில் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடத்தில் இரு விபத்துக்கள் இன்று (15) காலை இடம்பெற்றுள்ளது இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி கந்தளாய் – வெலிங்கடன் சந்தியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை கடக்க முற்பட்ட பெண் மீது மோதியதில் பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிசார் தெரிவித்தனர்.
பேராரைச் சேர்ந்த 69 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கந்தளாய் பேராற்று வெளி, கண்டி பிரதான வீதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றில் இரண்டு வயது சிறுவன் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கள் தொடர்பாக மேலதிக விசாரணை கந்தளாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்