பல இலட்சம் பெறுமதியான வலம்புரி சங்குடன் சிக்கிய இளைஞன்

திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 12 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த வலம்புரிச் சங்குடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (16) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தளை, மடவல உல்பத்த பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் திவுலப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.