ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பிரதமர் வகுத்துள்ள திட்டங்கள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
நாடு எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து பிரதமர் முக்கிய தகவல்களை வெளியிடவுள்ளார்.
இலங்கை எதிர் கொண்டுள்ள நெருக்கடியை சமாளிக்க தாம் பின்பற்ற விரும்பும் திட்டங்கள் குறித்து பிரதமர் அன்றைய தினம் விரிவாக விளக்குவார் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் இந்த விடயத்தை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிரதமர் பதவியை பொறுப்பேற்றதுடன், நாட்டுக்கு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், நாடு எவ்வாறான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது என்பது தொடர்பில் விளக்கம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.