போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மனித எலும்பு எச்சங்கள்,யாழ்.அனலைதீவு கடற்கரையில் மீட்பு.
யாழ்.அனலைதீவு கடற்கரையில் மனித எலும்பு எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.
மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது,
மனித எலும்பு எச்சங்கள் சில இவ்வாறு அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. இது குறித்து பிரதேச மக்கள் கருத்து தொிவிக்கையில்,
கடற்கரைக்கு அருகாமையில் சுடலை காணப்பட்டதாகவும் அதிலிருந்து மனித எச்சங்கள் கடல் அரிப்பின் மூலம் வெளிவந்திருக்கலாம் என கூறியுள்ளனர்.
வேறு சிலர் கருத்து தெரிவிக்கையில் கடலில் காணாமல் போனவருடையதாக இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்.ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில்,
பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.