மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு ஆலோசனை
இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக பெற்றோர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும் என்று தானும் உறுதியாக இருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayanth) தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வித்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு, முறையான நடைமுறைகள் இன்மையே முக்கிய காரணம் ஆகும்.
கல்வித்துறையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.