மீண்டும் தீவிரமடையும் கொரோனா தொற்று
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்திருந்த நிலையில் மீண்டும் தொற்று பரவல் தீவிரமடைய ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 663,800ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில், 646945 பேர் குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.