போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
முன் பதிவு செய்துகொண்டு கடவுச்சீட்டுகளை பெறுமாறு இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவிப்பு .
ஒரு நாள் மற்றும் சாதாரண சேவையின் மூலம் கடவுச்சீட்டுகளை பெறுபவர்கள் முன் பதிவு செய்துகொண்டு திணைக்களத்திற்கு வருகை தருமாறு இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 17 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், பலர் முன் பதிவு இன்றி வருகை தருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஒரு நாள் மற்றும் சாதாரண சேவை ஆகிய இரண்டிற்கும் முன்பதிவு செய்த நபர்களுக்கு மாத்திரமே சேவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது 0707 101 060 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் அரசாங்க வேலை நாட்களில் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த சேவைகள் வழங்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.