யாழில் காணாமல் போன 03 வயது சிறுமி மீட்பு! : வெளியான காணொளி!
நேற்றைய தினம் யாழ்ப்பாணம் – மிருசுவில் காணாமல் போன சிறுமி இன்றைய தினம் யாழில் உள்ள வரணி எனும் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.
மிருசுவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் முற்றத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நேற்றையதினம் காணாமல் போயுள்ளார்.
இவ்வாறு காணாமல் போண சிறுமி இன்றையதினம் யாழில் உள்ள வரணி எனும் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமி எவ்வாறு அப்பகுதிக்கு போனார் என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அயலவர்கள் சிறுமியிடம் யார் தன்னை கூட்டிச் சென்றார்கள் என்று வினவியபோது சிறுமி தாத்தா அழைத்துச்சென்றதாக கூறியதுடன் சிறுமி கழுத்து பகுதியில் கீரல்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.