யாழில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!
யாழ்ப்பாண பகுதியொன்றில் 3 நாட்கள் தொடர்ச்சியாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் வடமராட்சி, கெருடாவில் தெற்கு, மண்டபக்காடு பகுதியைச் சேர்ந்த 62 வயதான கனகன் சண்முகம் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் (03-12-2024) காலை அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.
வல்வெட்டித்துறை பதில் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா மரண விசாரணைகளை மேற்கொண்டார்.