உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
ரயில் மிதி பலகையில் பயணித்த இளைஞருக்கு நேர்ந்த கதி

ரயில் மிதி பலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் ரயில் பாதைக்கு அருகில் உள்ள சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று (18) காலை, பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் பயணித்த இளைஞன் ஒருவரே இவ்வாரு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் கணேமுல்ல தெனிய வீதியில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிரிபத்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்