போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மன நிலையை தொடர்ந்து கண்காணிக்க ‘மூட் – சீ ஹவ் யு பீல்’
உங்கள் மன நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமா? அதற்காக வடிவமைக்கப்பட்டதுதான், ‘மூட் – சீ ஹவ் யு பீல்’ என்ற செயலி.
இதன் பயனாளி, தனது மனநிலை தற்போது எப்படி உள்ளது என்பதை, வண்ணங்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும். உதாரணமாக, அவர் இலகுவான மன நிலையில் இருந்தால், மென்மையான நிறங்களை தேர்ந்தெடுக்கலாம். இப்படி, ஒரு நாளில், மனநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் நேரும்போதெல்லாம் அவர், தன் இந்த செயலியைத் திறந்து, வண்ணங்களால் குறிப்பெடுக்கவேண்டும். இக்குறிப்புகளை, ‘மூட் மீட்டர்’ என செயலியை உருவாக்கியோர் குறிப்பிடுகின்றனர்.
இப்படி, வாரம் மற்றும் மாதக் கணக்கில் பதிவுகளைச் செய்தால், பயனாளியின் மனநிலை மாற்றம் குறித்த தெளிவு அவருக்கே ஏற்படும். அவர், சோர்வான மன நிலையில் இருந்தால், இந்த செயலிக் குறிப்புகளைப் பார்த்து, எப்போது அவருக்குள் மாற்றம் ஏற்பட்டது என்பதை, நோட்டம் விட்டாலே தெரிந்துகொள்ளலாம். மூட் செயலியை பயன்படுத்தும்போது, சுய விழிப்புணர்வு மற்றும் சுய மனக்கட்டுப்பாடு வர வாய்ப்புகள் அதிகம்.