இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை அணி!
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான பொன்னான வாய்ப்பு இலங்கை அணிக்கு உருவாகியுள்ளது.
நேற்றைய (06) போட்டியில் தோல்வியடைந்த நடப்பு சம்பியனான இந்தியா தொடரிலிருந்து வெளியேறியது.
சுப்பர் 4 சுற்றில் இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள இலங்கை அணி முன்னிலையில் நீடிக்கிறது.