இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி மாணவி!
19 வயதுக்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் 30 பேர் குழுவில் கிளிநொச்சி மாவட்ட வீராங்கனை கலையரசி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் சாதாரண தரத்தில் கல்விக்கற்கும் சதாசிவம் கலையரசி என்ற மாணவி இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியி்ன் முதற்கட்ட 30 பேர் குழுவிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.