துயர செய்தி – திருமதி பத்மநாதன் மகேஸ்வரி

யாழ். தாவடி அரசடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் மகேஸ்வரி அவர்கள் 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் மருமகளும்,காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற கௌரி, மனோகரி(நோர்வே), பவானி(சுவிஸ்), சற்குரு(சுவிஸ்), திருஞானசம்பந்தன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற செல்லதுரை, சறோயினிதேவி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற பத்மாவதி, ராணி(கனடா), குணரத்தினம்(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,சிவலிங்கம்(கொழும்பு), செல்வேந்திரன்(நோர்வே), சுரேஸ்(சுவிஸ்), சத்தீஸ்வரி(சுவிஸ்), அருட்செல்வி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சிவசங்கர், கௌரிசங்கர், கார்திகா, பத்மசங்கர் நிசான், நிறோகன், நிருபனா, சுஜீவன், தனுஸ், நிருட்சிகா, கீர்த்தனா, கார்த்திகன், புரட்சிகா, இன்னிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,அக்சயன், அனுக்சன், அபர்ணயா, அபிஷானா, அஹானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.