போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
அதிரடிப்படையினரை அதிவேக வீதி கடமைகளில் இருந்து நீக்க நடவடிக்கை
அதிரடிப்படையினர் அனைவரையும் அதிவேக வீதி கடமைகளில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு 2024 இல் 5,000 புதிய பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளார்.
சஜித் பிரேமதாச 27/2 இன் கீழ் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதிவேக வீதிகளின் நுழைவாயில்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவதில்லை எனவும் அதிவேக வீதி அமைப்பில் தீயணைப்பு மற்றும் உயிர்காக்கும் பணிகளை விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 11 மாதங்களில் 164 சந்தர்ப்பங்களில் மாத்திரமே இவ்வாறான சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.