போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி வாகையை சூடிய இலங்கை
இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்றைய தினம் (30-11-2022) கண்டி, பல்லேகல சர்வதேச விளையாட்டுத் திடலில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 313 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக இப்ராகிம் சத்ரன், 4 சிக்ஸர்கள் 15 பவுண்டரிகள் அடங்கலாக 162 ஓட்டங்களை பெற்றார்.
இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் 314 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய, இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 49.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 314 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 67 ஓட்டங்களையும், சரித் அசலங்கா ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக பந்துவீச்சில் ரஷித் கான் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.