போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இடம்பிடித்த சாமரி அத்தபத்து!
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அத்தபத்து, முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையின் திங்கட்கிழமை (24) புதுப்பிப்பின் படி, சாமரி அத்தபத்து 773 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆட்டமிழக்காமல் 195 ஓட்டங்களை குவிப்பதற்கு முன்பு சாமரி அத்தபத்து துடுப்பாட்ட வரிசையில் 2வது இடத்தில் இருந்தார்.
சாமரி அத்தபத்து இதுவரை 101 ஒருநாள் போட்டிகளில் 9 சதங்கள் மற்றும் 16 அரைசதங்களுடன் 3,513 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இதேவேளை, சாமரி அத்தபத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வுபெற உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.