போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
புதிய பதவியை பெற்ற டிலான் பெரேரா!
நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நேற்று (21) நாடாளுமன்றத்தில் தெரிவுசெய்யப்பட்டார்.
இவருடைய பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் மாயாதுன்ன சிந்தக அமல் முன்மொழிந்ததுடன், கெவிந்து குமாரதுங்க இதனை வழிமொழிந்தார்.
இந்நிலையில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், இழப்பீடுகள் பற்றிய அலுவலகம், சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்தத் திணைக்களம், அரசாங்க மொழிகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களைக் குழு முன்னிலையில் கலந்துரையாடல்களுக்கு அழைக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.