போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
2023 ஐ.பி.எல் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு! மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்
2023ஆம் ஆண்டிற்கான இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை நேற்றைய தினம் (17-02-2023) வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி ஹகமதாபாத் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடர் மே மாதம் 21ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.
நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு முதல் போட்டியில் எதிர்கொள்ளவுள்ளன.
மேலும் இம்முறை அனைத்து அணிகளும், தமது சொந்த மைதானத்தில் 7 போட்டிகளிலும் ஏனைய மைதானங்களில் 7 போட்டிகளிலும் விளையாடவுள்ளன.
அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதேவேளை, இந்தியன் பிரிமியர் லீக் வரலாற்றில் 1000 அவது போட்டி மே மாதம் 6 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன் இதில் சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் மோதவுள்ளன.