உயர்தரப் பரீட்சை மீள்பரிசீலனை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
துயர செய்தி – திருமதி சுப்பிரமணியம் கமலேஸ்வரி

யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville வை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கமலேஸ்வரி 16-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தையன் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவஞானேஸ்வரி, பரமேஸ்வரி(ஓய்வுபெற்ற அதிபர்- யா/கைதடி குருசாமி வித்தியாலயம்), சிவகுமாரன்(கனடா), விக்கினேஷ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும்,ஸ்ரீசிவஈஸ்வரன், ஸ்ரீதரன், ஜெயமதி, மதிவாணி, கௌசிகன், திருசாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,கௌசலா, சிவானி, நந்தகுமாரன், சுரேஸ்குமார், தனுசா, வாமேதவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,விதுசா, கஜானன், சங்கவி, தமிழ்ப்பிரியன், கலைப்பிரியன், தனகவி, ஆதித்தன், ஆரணி, லட்சுமி, பவிஷா, கோபிகா, டினோஜ், பிரித்திகா, அக்சரா, நகுல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம், தாமோதரம்பிள்ளை, அமுதலிங்கம், காலஞ்சென்ற சிவகோசரியார், சிவபாக்கியம், முத்துக்குமாரசாமி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.