அடுத்த சில வாரங்களில் அரிசியின் விலை 400ரூபாவை தாண்ட வாய்ப்பு
இலங்கையில் கடந்த சில மாதங்களாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் தற்போது 1கிலோ அரிசி 200முதல் 250 வரை விற்பனையாகி வருகின்றது.
இந்த நிலையில் அடுத்த சில வாரங்களில் அரிசியின் விலை 400ரூபாவை தாண்ட வாய்ப்புள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,
உணவுப் பொருட்களின் விலைகள் விண்ணைத் தொடுகின்றன. குறிப்பாக அரிசியின் விலை ரூ.400 ஐ தாண்ட வாய்ப்புள்ளது.
அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அடுத்த சில வாரங்களில். வெறும் விலைக் கட்டுப்பாடுகள் வேலை செய்யவில்லை மற்றும் செயல்படாது.
அனைவருக்கும் அடிப்படை உணவுப் பொருட்களை உறுதி செய்ய தீவிர தலையீடு அவசியம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.