அதிகரிக்கும் தங்கத்தின் விலை!
சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.
கொரோனா காலத்தில் தடைப்பட்டுள்ள விழாக்கள் அனைத்தும் களை கட்டத்தொடங்கியுள்ள நிலையில், தங்கத்தின் விலை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்பினால் தங்கத்திற்கான தேவையானது மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சினையானது சர்வதேச அளவில் பணவீக்கத்தினை தூண்டலாம் எனவும், இவை பணவீக்கத்திற்கு எதிராக தங்கம் விலை அதிகரிக்க வாய்ப்பாக அமையலாம் எனவும் கருதப்படுகின்றது.
உலக நாடுகளில் தங்கத்தின் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இது மேலும் தங்க விலை அதிகரிக்க காரணமாக அமையலாம் எனவும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.