அரச ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணிகளை மேற்கொள்ள சந்தர்ப்பம்
அரசாங்க மற்றும் கல்வித் துறை ஊழியர்களுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை முதல் இரண்டு வாரங்களுக்கு வீட்டில் இருந்து பணிகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பிலான சுற்றறிக்கை எதிர்வரும் திங்கட் கிழமை வௌியாக உள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இது பொருந்தாது அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.