போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்றைய தினம் வரையில் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் 70 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் விசாரணை பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரிசி விலையை காட்சிப்படுத்தாமை தொடர்பில் 150 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, அந்த சுற்றிவளைப்புக்களுடன் தொடர்புடைய வர்த்தகர்களுக்கு எதிராக அடுத்த வாரத்திற்குள் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராத தொகையினை அறவிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.