தோழியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு: 12ஆம் வகுப்பு மாணவி பள்ளி வளாகத்தில் தற்கொலை
கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட வியாளேந்திரன் தம்பி
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சதாசிவம் வியாளேந்திரன் அவர்களின் தம்பி உட்பட இருவர் கைது செய்யபட்டுள்ளனர்.
வியாளேந்திரன் தம்பியான சதாசிவம் மயூரன் மற்றும் ஏறாவூர்பற்று பிதேச சபையின் டீ.ஓ.வாகக் கடமையாற்றும் கமலக்கண்ணன். இவரும் 15 இலட்சம் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் காலை மட்டக்களப்பில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் வைத்து 15 இலட்சம் ரூபா லஞ்சம் வாங்கும் போதே கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரும் தற்பொழுது மட்டக்களப்பு குற்ற தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.