ஜப்பானிய பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள மகிந்த தசநாயக்க
எதிர்கால சந்ததியினருக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, தனது தனிப்பட்ட செல்வத்தைக் கொண்டு நடமாடும் நூலகத்தை நடத்தும் இலங்கையில் ஓர்அற்புதமான மனிதனின் கதை ஜப்பானிய பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையிலுள்ள 32 வயதான மகிந்த தசநாயக்க தனது சொந்த செலவில் பழுது பார்த்த நூலகத்தை சொந்தமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்வதோடு, விடுமுறை நாட்களில் தான் வசிக்கும் கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களின் பிள்ளைகளுக்கு புத்தகங்களை விநியோகித்துளளார்.
இந்நிலையில் ஜப்பானியக் கல்வி அதிகாரிகள் அவரின் சேவையைப் பாராட்டி குழந்தைகளுக்கு அவரின் பாடத்தை வாசிக்கக் கற்றுக்கொடுக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.