நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்று புகையிரத்துடன் மோதுண்டு விபத்து
யாழ்.அரியாலை நெளுங்குளம் வீதி மாம்பழம் சந்திக்கு அருகாமையிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்று புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் தெரியவருவது,
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் கார் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் தென்னிலங்கையை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.