ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
புடினிடமிருந்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிக்கு கிடைக்கப்பெற்ற கடிதம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.
குறித்த கடித்தை, ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் யூரி மேட்டேரியினால் இன்றைய தினம் (22-06-2022) கையளித்துள்ளது.
இலங்கை சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கபபட்டிருந்த Aeroflot விமானம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 5ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இன்றையா தினம் முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்த யூரி மேட்டரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதத்தை கையளித்துள்ளார்.
இலங்கையின் எண்ணெய் மற்றும் உர நெருக்கடியை மிகவும் சாதகமாக பரிசீலிக்க முடியும் எனவும், இது தொடர்பில் இலங்கை தரப்பில் இருந்து சாதகமான தலையீடு இல்லை எனவும் ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இன்னும் ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டால், இந்த விடயத்தில் இன்னும் தீவிரமான பங்களிப்பை வழங்க முடியும் என்றார்.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி சாதகமான பதிலை வழங்குவதற்கு ரஷ்ய அரசாங்கம் நம்புவதாக தூதுவர் முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
21வது திருத்தம் மற்றும் சர்வகட்சி அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் கட்டமைப்பு மற்றும் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேம்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
ஏரோஃப்ளோட் விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் உடன்பாடு ஏற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் தலையிடுவார் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடிதத்தின் உள்ளடக்கம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் விரைவில் கலந்துரையாடி ரஷ்ய அரசாங்கத்திற்கு சாதகமான பதிலை வழங்க தலையிடுவேன் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.