போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
யாழில் காணாமல் போன சிறுமியின் திடுக்கிடும் உண்மைகள்
மிருசுவில் வடக்கைச் சேர்ந்த மூன்று வயதான பவிசா என்ற சிறுமி நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் இருந்து காணாமல்ப் போன நிலையில் சுமார் நான்கு மணித்தியாலங்களின் பின் வரணி மாசேரி பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.
கால் பாதம் அனைத்தும் முள்ளுக் குத்தி கறுப்பாகி போயுள்ளது.
வயல், குளக்கரை, உவர்நீர் தடுப்பணை, முற் பற்றைக்காடுகள் என மிக கடுமையான பாதைகளை நடந்து கடந்துள்ளார் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஆச்சரியம் என முகநூலில் நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் குழந்தையின் கால்ப் பாதங்களைப் பார்த்தால் அதனை மறுக்கவும் முடியவில்லை. நேற்று முன்தினம் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பவிசா இன்று மாலை மிக்க நலமோடு வீடு திரும்பியுள்ளார்.
மேலும் குழந்தையிடம் கேட்டபோது தன்னை ஓர் ஆட்டுக்குட்டி கூட்டிச் சென்றதாக கூறுகிறாள், ஊரவர் இதனை மத நம்பிக்கையின் வழியில் இது ஓர் துஷ்ட சக்தி அழைத்துச் சென்றுதாக நம்புகிறார்கள். எது எப்படியோ குழந்தை சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.