நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
60 தங்க பிஸ்கட்டுகளுடன் நபரொருவர் கைது!
ஜா-எல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவர் 60 தங்க பிஸ்கட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது விமான நிலைய வரியில்லா வர்த்தக வளாகத்தின் ஊழியர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
157 மில்லியன் பெறுமதியும் 6.995 கிலோ எடை கொண்ட தங்க பிஸ்கட்களே கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த தங்க பிஸ்கட்களை தலா பத்து பார்சல்களில் தயார் செய்து இடுப்பில் கட்டி இருந்த நிலையில் நேற்று இரவு 7.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் குறித்த நபரும் தங்க பிஸ்கட்டுகளும் மேலதிக விசாரணைக்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
தலா 116.62 கிராம் எடையுள்ள இந்த தங்க பிஸ்கட்டுகள் அனைத்தும் 24 காரட் ஒற்றை பவுன் தங்கத்தால் செய்யப்பட்டவை என மதிப்பீட்டாளர்கள் சுங்கத்திற்கு உறுதி செய்துள்ளனர்.
இந்த தங்க பிஸ்கட்டுகள் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதாக சுங்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
தங்க பிஸ்கட்டுகளை விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்வதற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.