ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
துயரச்செய்தி – திரு இரத்தினம் அருமைத்துரை

யாழ். உடுவில் தெற்கு இணுவில் தெற்கு பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் அருமைத்துரை அவர்கள் 18-05-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசதுரை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற பரமுருகானந்தன், சிவமதி மற்றும் கீர்த்திசீலன்(சுவிஸ்), அருள்மதி, தர்மசீலன், பஞ்சசீலன்(லண்டன்), கலைமதி(இந்து கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம், தெல்லிப்பழை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிவேதினி(சுவிஸ்), சண்முகநாதன், சிவமதி, வினோபா(லண்டன்), சகிபரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிதுலன்(சுவிஸ்), நிகிர்தன்(சுவிஸ்), நிவேதன்(சுவிஸ்), ஓவியா(லண்டன்), யினுசிகன், தனுசிகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சந்திரதேவி அவர்களின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான தயாலினி, சுஜாதா, கஜன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.