ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
துயரச்செய்தி – திரு குமரேஸ்வரன் பரமநாதர்

யாழ். சாவகச்சேரி மறவன்புலோவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதர் குமரேஸ்வரன் அவர்கள் 23-05-2023 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதர் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம், மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சுலோசனாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
மிதுனா , கிருசனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வியாபகன் அவர்களின் மாமனாரும்,
மகேஸ்வரன்(சாவகச்சேரி), உமாதேவி(மறவன்புலோ), இரத்தினகாந்தி(கொக்குவில்), கணேஸ்வரன்(சுவிஸ்), ஜெயமளாதேவி(நுணாவில்), கருணாதேவி(மறவன்புலோ) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, அழகராசா மற்றும் சந்திரமூர்த்தி(கொக்குவில்), புவனேஸ்வரி(சுவிஸ்), வேலாயுதபிள்ளை(நுணாவில்), காலஞ்சென்ற குமரேஸ்வரன் மற்றும் ராஜேஸ்வரி(வல்வெட்டி), புவனேஸ்வரி(வல்வெட்டி), சிவமணி(சுவிஸ்), சிவபாலசுந்தரம்(ராசு- சுவிஸ்), காலஞ்சென்றவர்களான ஸ்ரீபாலசுந்தரம், ஜெயபாலசுந்தரம் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சின்னையா, குகதாஸ் மற்றும் பூபாலசுந்தரம்(சுவிஸ்), கலா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சபேசினி, சாந்தினி, சாந்தன், சஞ்சிகா, சஜீவன், கபிலன், விதுஷன், மிதிலன், கர்ஜனா, கீர்த்தனா, ராதி, தயானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யசிதரன், கஜவதனி, மீரா, நிலானி, திலக்க்ஷன், சூட்டி, புஞ்சி(அனு), சுதா, பார்த்தீபன், தர்ஷினி, லர்ஷினி(பபி), தர்ஷன், சியாமா, ராஜன் ஆகியோரின் சித்தப்பாவும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.