யாழில் பொலிஸாரை சேற்றுத் தண்ணீரில் குளிக்கவைத்த மக்கள்!

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickresinghe) வருகையை எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பெரும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸார் அதனைத் தடுத்து நிறுத்தியதால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், பொலிஸாருக்கு சேற்று தண்ணீர் ஊற்றியமை அப்பகுதியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.