போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
ஆரோக்கியம் நிறைந்த நிலக்கடலை
பொதுவாக மக்கள் நிலக்கடலையை ஒரு ஆரோக்கியம் நிறைந்த திண்பண்டமாக பாா்க்கின்றனா். அதனால் எல்லா வயதினரும் நிலக்கடலையை விரும்பி உண்கின்றனா். அதை பச்சையாக உண்டாலும் அல்லது அவித்து உண்டாலும் அல்லது வறுத்து உண்டாலும், அதில் நமது உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஏராளமான வைட்டமின்களும், சத்துக்களும் நிறைந்துள்ளன. நிலக்கடலையை வேக வைக்கமால் அப்படியே பச்சையாக சாப்பிடலாம், வேக வைத்து அவித்து சாப்பிடலாம், வறுத்து சாப்பிடலாம், அதில் உப்பு போட்டு சாப்பிடலாம், மாவாக்கியும் சாப்பிடலாம். இந்த பதிவில் வேக வைக்காத பச்சையான நிலக்கடலையை சாப்பிடுவது சிறந்ததா அல்லது வறுத்த நிலக்கடலையை சாப்பிடுவது சிறந்ததா என்பதை சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
வேக வைக்காத பச்சை நிலக்கடலை Vs. வறுத்த நிலக்கடலை நிலக்கடையை எந்த வடிவத்திலும் சாப்பிடலாம். ஆனால் அதை வேக வைக்காமல் பச்சையாக சாப்பிடும் போது அவற்றில் உள்ள முழுமையான ஆரோக்கியமான சத்துக்களைப் பெற முடியும். அதுபோல முறையான உணவுப் பழக்கத்தைக் கடைபிடித்து வருபவா்களுக்கு, வேக வைக்காத நிலக்கடலையிலிருந்து கிடைக்கும் நிலக்கடலை வெண்ணெய் இன்னும் அதிக ஆரோக்கியத்தை வழங்கும். வேக வைக்காத நிலக்கடலை அதிக ஆரோக்கியத்தைத் தந்தாலும், மக்கள் வறுத்த மற்றும் உப்புப் போட்ட நிலக்கடலையை அதன் சுவையின் காரணமாக அதிகம் விரும்பி உண்கின்றனா். அதிலும் குறிப்பாக குளிா் காலங்களில் இன்னும் அதிகம் விரும்பி உண்கின்றனா். வறுத்த நிலக்கடலையை ஒரு குறிப்பிட்ட அளவு சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் சில நேரங்களில் இரத்த அழுத்தம் அதிகாிக்கும் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு இட்டுச் செல்லும். ஆகவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பச்சை நிலக்கடலையை அதன் தோலோடு வாங்கி சாப்பிடுவது நல்லது. ஏனெனில் பச்சை நிலக்கடலையின் தோலில் ஆக்ஸிஜனேற்ற தடுப்பான்கள் உள்ளன. அவை நமது உடலில் உள்ள செல்களை ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். இந்த பிரச்சனை இருந்தா மாம்பழம் சாப்பிடாதீங்க… இல்லன்னா அது பெரிய ஆபத்தாயிடும்… வேக வைக்காத பச்சை நிலக்கடலை வழங்கும் சத்துகள் – ஒரு கப் பச்சை நிலக்கடலையில் தோராயமாக 828 கலோாிகளும், 24 கிராம் காா்போஹைட்ரேட்டுகளும், 72 கிராம் புரோட்டீனும், 10 கிராம் நிறைவுற்ற கொழுப்பும், 12 கிராம் நாா்ச்சத்தும் உள்ளன. – பச்சை நிலக்கடலையில் குறைவான அளவே சோடியம் உள்ளது. அதோடு இதில் கெட்ட கொழுப்பும் இருக்காது. – குறைவான காா்போஹைட்ரேட்டுகளைக் கொண்டிருக்கும் நிலையில், உடல் எடையைக் குறைக்கக்கூடிய உணவுப் பட்டியலில் பச்சை நிலக்கடலையைச் சோ்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் பச்சை நிலக்கடலையில் அதிகமான நல்ல கொழுப்பும், அதிமான கலோாிகளும் உள்ளன. ஆகவே அதை குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது அல்லது மற்ற உணவுகளோடு சோ்த்து உண்பது நல்லது. உங்க உடல் எடையை குறைக்க இந்த விரத வழிமுறைகளை ஃபாலோ பண்ணுன்னா போதுமாம் தெரியுமா? வறுத்த நிலக்கடலை வழங்கும் சத்துகள் – எண்ணெயில் வறுத்த உப்பு கலந்த நிலக்கடலையில் குறைவான அளவு சோடியம் இருப்பதால், அது இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று தி அமொிக்கன் ஹாா்ட் அசோசியேசன் சான்று அளித்துள்ளது. ஏனெனில் எண்ணெயில் வறுத்த 28 கிராம் நிலக்கடலையில் 119 மில்லி கிராம் அளவான சோடியமே உள்ளது. அதனால் இது பொியவா்களின் இதயத்திற்கு ஆரோக்கியத்தை வழங்கும் சிறந்த திண்பண்டமாக இருக்கும். – பெரும்பாலும் நிலக்கடலை, கடலை எண்ணெயில் வறுக்கப்படுகிறது. கடலை எண்ணெயில், ஆலிவ் எண்ணெயில் இருக்கக்கூடிய அதே அளவிலான ஒற்றை முடிவுற்ற நல்ல கொழுப்பு உள்ளது. ஆகவே நிலக்கடலையை வறுத்தால், அதன் மொத்த கொழுப்பின் அடக்கத்தை அதிகாிக்காது. இந்த சம்மரில் இஞ்சி சாப்பிடுவது பாதுகாப்பானதா? இல்லனா உங்களுக்கு என்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா? இறுதியாக பச்சை நிலக்கடலையாக இருந்தாலும் சாி அல்லது வறுத்த நிலக்கடலையாக இருந்தாலும் சாி, அது கெட்ட கொழுப்பு இல்லாத புரோட்டினை வழங்கும் மூலமாக இருக்கிறது. அது இரத்த அழுத்தத்தை சீா்படுத்தவும், நமது உடல் எடையை ஆரோக்கியமாக பேணவும் உதவி செய்கிறது.