கோடைக்காலத்தில் மாம்பழம்
பழங்களில் மாம்பழம் மிகவும் சுவையான பழம். இந்த பழம் வெயில் காலத்தில் கிடைக்கக்கூடியது. முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இதனால் கோடைக்காலத்தில் அனைவரது வீடுகளிலும் இந்த மாம்பழம் இருக்கும். மாம்பழம் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட. என்ன தான் ஆரோக்கியமான பழமாக இருந்தாலும், அதை அளவாக சாப்பிட்டால் தான் அதன் நன்மைகளை முழுமையாக பெறலாம்.
அதே சமயம், மாம்பழத்தை ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால் அது அதிக ஆபத்தை ஏற்படுத்திவிடும். சாதாரணமாக மாம்பழத்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் உடலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்கட்டுரையில் நாம் எந்த ஆரோக்கிய பிரச்சனையைக் கொண்டவர்கள் மாம்பழத்தை அதிகமாக சாப்பிடக்கூடாது என்பதைக் காண்போம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் சர்க்கரை நோய் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனெனில் மாம்பழத்தில் இயற்கையாகவே சர்க்கரை அதிகம் உள்ளது. எனவே இதை சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் போது, அது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டின்றி அதிகரித்து, நிலைமையை மோசமாக்கிவிடும்.
எனவே சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிட விரும்பினால், ஒரு துண்டிற்கு மேல் சாப்பிடக்கூடாது. உங்க உடல் எடையை குறைக்க இந்த விரத வழிமுறைகளை ஃபாலோ பண்ணுன்னா போதுமாம் தெரியுமா? வயிற்று பிரச்சனைகள் மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே வயிற்றுப் போக்கு பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், மாம்ம்பழத்தை சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து வயிற்றுப் போக்கை தீவிரப்படுத்தி, உடலில் நீரிழப்பை ஏற்படுத்திவிடும். இது தவிர வேறு ஏதேனும் வயிற்று பிரச்சனை உள்ளவர்களும் மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
உடல் பருமன் உடல் பருமன், அதாவது அதிக எடையைக் கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் மாம்பழத்தில் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருந்தால், மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டுவிடாதீர்கள். இல்லாவிட்டால், அது உடல் பருமனை மேலும் அதிகரிக்கும். இந்த சம்மரில் இஞ்சி சாப்பிடுவது பாதுகாப்பானதா? இல்லனா உங்களுக்கு என்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா? அலர்ஜி உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை உள்ளதா? தற்போது கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான மாம்பழங்கள் விரைவில் பழுக்க வைப்பதற்காக கால்சியம் கார்பைடு பயன்படுத்தப்படுகிறது. அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இப்படி கால்சியம் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை உட்கொண்டால், அது அவர்களின் நிலைமையை மோசமாக்கிவிடும். எனவே கவனமாக இருங்கள். இதய நோயாளிகள் மாம்பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. ஆகவே பொட்டாசியம் அதிகம் நிறைந்த மாம்பழத்தை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது, உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகிறது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அது ஏற்கனவே இதய நோய் உள்ளவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.