துயரச்செய்தி – திருமதி செல்வராணி முருகேஷ்வரன்
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகிபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி முருகேஷ்வரன் அவர்கள் 20-09-2023 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சீதாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாதுங்கர் செல்லமுத்து தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற முருகேஷ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயவதனன், ஜெயசுதா, ஜெயசுபா, உஷாகினி, வினோத் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலசுவர்ணா, ரங்கநாதன், சுதேந்திரன், மயூரன், ஜனார்த்தனி ஆகியோரின் அன்பு மாமியும்,
சிவகாமலெட்சுமி(புகனம்), மணிவாசகர், மோகனதாஸ், கிருஷ்ணதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், மோகேஸ்வரன், அன்னலிங்கம், மனோன்மணி மற்றும் மோகனாம்பாள்(ராசம்), பேரின்பகாந்தி(கிளி), பத்மாவதி(மணி), காலஞ்சென்ற ஆறுமுகம், பிரியதர்சினி, கௌசலை, சுகந்தி ஆகியோரின் மைத்துனியும்,
லக்சயா, அபிசேக், துசிதன், நிமிஷா, நிதுசன், அட்சயா, விதுரன், மதுசிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்