துயர செய்தி – செல்வன் றஜீதன் தயாளன்

பிரான்ஸ் Paris ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன் றஜீதன் தயாளன் அவர்கள் 26-01-2023 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(சின்னத்துரை) அன்னப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கண்ணம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,புளியங்கூடலைச் சேர்ந்த தயாளன் சிவலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,ராகவி, ராகுல் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சிந்துஜன் அவர்களின் அன்பு மைத்துனரும்,சஜின் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.