வர்த்தகரிடம் பெரும் தொகை மோசடி செய்த பெண்!

வர்த்தகர் ஒருவரிடம் பெரும் தொகை மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பெண் ஒருவர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருவரின் 22 கோடியே 60 இலட்சம் ரூபா பணம், 60,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் தங்க நகைகளைக மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான பெண்ணை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.