நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
வரலாற்றில் முதல் தடவை… சாதனை படைத்த காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி
சமீபத்தில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற ஹொக்கி போட்டியில் வரலாற்றில் முதல் தடவையாக காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளது என கல்லூரி அதிபர் மயில்வாகனம் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஹொக்கி போட்டிகள், விபுலானந்த மத்திய கல்லூரி மைதானத்தில் அண்மையில் இடம்பெற்றது.
இந்த போட்டியில், கிழக்கு மாகாணத்தில் இருந்து ஆக அம்பாறை மாவட்டம் சார்பில் நான்கு அணிகள் மாத்திரமே கலந்து கொண்டன.
இறுதிப் போட்டியில் காரைதீவு விபுலானந்தா அணியும், அம்பாறை டிஎஸ். சேனநாயக்க அணியும் மோதின.
குறித்த போட்டிகளில் 4-1 என்ற ரீதியில் முதலிடத்தை அம்பாறை டி.ஸ். சேனநாயக்கா கல்லுாரி அணியினரும், இரண்டாமிடத்தை விபுலானந்த மத்திய கல்லூரி அணியினரும் பெற்றுக் கொண்டதாக கல்லூரி அதிபர் குறிப்பிட்டுள்ளார்.