ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
இந்த 5 ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சியால் அடிக்கவுள்ள கோடீஸ்வர யோகம்!

இந்த புத்தாண்டு முதல் சனி பகவான் சில ராசிக்காரர்களை குபேரனாக மாற்றப்போகிறார். காரணம் கும்ப ராசியில் ஆட்சி பெறறு அமரப்போகும் சனி பகவான் 5 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார்.
அந்த 5 ராசிக்காரர்கள் யார் என பார்க்கலாம்…
மேஷம் : மேஷ ராசி மற்றும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறது.
சனி பகவான் பொதுவாக 11ஆம் இடமான லாப ஸ்தானத்தில் பயணம் செய்வது யோகத்தை கொடுக்கும். கும்ப ராசியில் அமரப்போகும் சனி மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குபேர யோகத்தை தரப்போகிறது. தொட்டதெல்லாம் பொன்னாகப்போகிறது.
உங்களுடைய தசாபுத்தியும் சரியாக கை கொடுக்கும் பட்சத்தில் இந்த சனி பெயர்ச்சி நிச்சயம் உங்களை குபேரனாக மாற்றும் என்பது நிச்சயம். தடை பட்ட சுப காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். ஜாமீன் கையெழுத்து போட்டு யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். பண முதலீடுகளில் கவனம் தேவை.
மிதுனம் : தொழிலில் நீங்கள் ராஜாவாக மாறும் வருடமாக இந்த வருடம் அமையப்போகிறது. சனிப் பெயர்ச்சி காரணமாக உங்களுக்கு இதுவரை இருந்த துன்பங்கள் விலகி, சந்தோஷத்துக்கான வாய்ப்புகள் பிரகாசமாகின்றன.
உங்களின் சாதுர்யமான பேச்சினால் நட்பு வட்டாரம் அதிகரித்து அதன்மூலம் கிடைக்கும் ஆதாயம் உங்களை பொருளாதார சூழலில் வேறொரு தடத்துக்கு அழைத்துச் செல்ல இருக்கிறது.
இதுவரை இழுத்துக் கொண்டிருந்த வேலைகள், விவகாரங்கள், பிரச்சனைகள், பரிவர்த்தனைகள் அனைத்தும் முடிந்து நீங்கள் வெற்றி பெற நீங்களே காரணமாக அமைவீர்கள். கொஞ்சம் ஈகோவை விட்டு கொடுத்து நீங்கள் நேரடியாக இறங்கி பேச்சுவார்த்தை நடத்தினால் சில நொடிகளில் தீரும் விசயங்கள்தான் இவை.
துலாம் : குறிப்பிட்ட தொழில் என்று இல்லை எந்த தொழிலை எடுத்தாலும் தொட்டதெல்லாம் பொன் என்பது போல உயர்வடைவீர்கள். ஆனால் பொறுமை மிக அவசியம்.
கவனக்குறைவு அலட்சியம் உங்களிடத்தில் இருந்தால் அதை எப்படி நீக்கி தொழிலில் முன்னேற்றம் அடைவது என்பதை நீங்கள்தான் கற்றுக் கொள்ள வேண்டும். எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் உங்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்கப்பெறும்.
திருமண வயதைத் தொட்டவர்களுக்கு இப்போதே திருமண ஏற்பாடு செய்வது நல்லது. இருந்தாலும் மணம் செய்பவர்களின் கருத்துக்களைக் கேட்டு அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும்.
பெரியவர்களின் தலையாயக் கடமை என்பது தங்கள் பிள்ளைகளின் உண்மையான ஆசைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே. அதனை மீற வேண்டாம்.
முக்கியமாக துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் திருமணம் விரைவில் கைக்கூடும். நிதி பிரச்னைகள், உடல் நல பிரச்னைகள் தீரும். ஆனால் கவனமுடன் செயல்பட்டு அவ்வப்போது உடல் பரிசோதனையைச் செய்துகொள்ளுங்கள்.
தனுசு : பதவி உயர்வு, நீங்கள் விரும்பிய பதவி, விருப்பமான இடமாற்றம், நல்ல நிறுவனங்களில் வேலை மற்றும் சலுகைகள் என தனுசு ராசிக்காரர்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
காதல் திருமணத்தில் மிகப் பெரிய குழப்பங்கள் இதுவரை நடந்து வந்திருக்கும். இனி அதைப் பற்றி கவலை கொள்ளாமல் கரியரில் கவனம் செலுத்துங்கள்.
திருமணம் ஆகவில்லை என்றாலோ காதலிக்கிறீர்கள் என்றாலோ கவலை இல்லை உங்கள் பிரச்னைகள் அனைத்தையும் சனிபகவான் தீர்க்கப்போகிறார்.
மகரம் : ஆசைகளை நிறைவேற்றும் ஆண்டாக அமையும். சனி பகவானின் அருளால் உங்கள் கஷ்டங்கள் நீங்கி நினைத்தவற்றை நிறைவேற்றும் நாள் நெருங்கிவிட்டது.
ஏற்கனவே சில விசயங்களைத் தொடங்கி இருப்பீர்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கும். லோன் மூலம் வாங்கி பணத்தை விரயம் செய்யவேண்டாம். ஆனால் தொழிலில் முதலீடாக வாகனத்தை வாங்குவது நல்ல ஏற்பாடாகவே இருக்கும்