பண மழையில் நனைய இருக்கும் 3 ராசிக்காரர்கள்

கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர வக்ரமாகி பின்னோக்கியும் பயணிக்கும்.
அப்படி கிரகங்கள் பின்னோக்கி பயணிக்கும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதுவும் ஒரே நேரத்தில் பல முக்கியமான கிரகங்கள் வக்ரமாகும் போது அதன் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும்.
அந்த வகையில் சனி பகவான், புத்திகாரகன் புதன் மற்றும் செழிப்பிற்கு காரணமான குரு பகவான் ஆகிய மூன்று கிரகங்களும் வக்ர நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி மூன்று கிரகங்களும் வக்ரமாக இருப்பதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும் 3 ராசிக்காரர்கள் இந்த வக்ர காலத்தில் குரு, சனி மற்றும் புதனின் அருளைப் பெற்று பல அற்புதமான நன்மைகளைப் பெறுவார்கள்.
ரிஷபம்
சனி, குரு, புதன் வக்ரமாக இருப்பதால் பணிபுரியும் ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.
பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
சொத்துக்களில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் நல்ல பலனைத் தரும்.
வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பரம்பரை சொத்துக்களால் நல்ல பலனைப் பெறக்கூடும்.
கன்னி
சனி, குரு, புதன் வக்ரமாக இருப்பதால், கன்னி ராசிக்காரர்கள் நிதி ரீதியாக சிறப்பான பலனைப் பெறுவார்கள்.
சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு வந்து சேரும். பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்களின் ஆசைகள் நிறைவேறும்.
தடைப்பட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். வாகனம், சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
தனுசு
சனி, குரு, புதன் வக்ரமாக இருப்பதால் தனுசு ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் காண்பார்கள்.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
கடவுள் வழிபாட்டினால் மன அமைதி கிடைக்கும். இக்காலத்தில் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.
குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். ஆனால் தாயின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.