சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க வேண்டுமா? தினமும் இந்த மூன்று பழம் போதும்
தானியங்களும் பழங்களும் நம்முடைய வாழ்வாதாரங்களில் உள்ளவைகளாகும். பூமியில் கிடைக்கக்கூடிய அற்புதம் என்றால் அது பழங்கள் தான்.
பழங்கள் உணவாகவும் மருந்தாகவும் பயன் அளித்து நிறைவான ஊட்டச்சத்துக்களையும் நமக்கு சேர்த்தே அள்ளித்தருபவை.இவை சுவைக்காகவும் ருசிக்காகவும் மட்டுமல்ல! நமக்கு பலத்தையும் தருகிறது.
பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் கிடைக்கின்றன.இவை இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பல பிரச்னைகள் இதனால் வராது.
இதில் உடல் நலத்திற்கு தேவையான சத்துக்கள் இருந்தாலும் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கும் பழங்கள் என்ன என்பதை இந்த பதிவல் பார்க்கலாம்.
பெண்களுக்கு பொதுவாக ஒளிரும் சருமம் என்றால் பிடிக்கும்.இதற்காக பல கெமிக்கல்களையும் பயன்படுத்துகிறார்கள்.இது உடலுக்கு சிறந்த தீர்வு இல்லை. நாம் உண்ணும் உணவின் மூலமும் சருமத்தை சருமத்தை ஆரோக்கியமாக நிறமாக்க முடியும்.
இது தாமதமான பெறுபேற்றை தந்தாலும் ஆரோக்கியமானது.அதில் சிலவகை சரும அழகிற்காகவும் பயன்படுத்தலாம்.பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, இ, பொட்டாசியம், கல்சியம், ஃபோலேட் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
இது பல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கும், சிறுநீரக கற்களை கரைப்பதற்கும், நரம்புகள் பலமடையவும், ஆண்மை தன்மை பலமடையவும், ரத்த விருத்தி உண்டாக்கவும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
இதை தவிர பப்பைன் போன்ற என்சைம்கள் எள்ளதால் சருமத்தில் இறந்த செல்கள் காணப்படுகின்றன.இதனால் சருமம் பொலிவாக காணப்படும்.இது குடல் உப்புசத்தை குறைக்கும்.
இப்படி உடல் ஆரோக்கியமாக இருப்பதால் சரும்ம எப்போதும் பொலிவாக காணப்படும்.இதை தவிர ஸ்ட்ராபெர்ரி பழம் பார்ப்பதற்கு எப்படி அழகாக இருக்கிறதோ அந்த அளவிற்கு நமது உடலையும் அழகாக வைத்துக்கொள்ளும்.
இதில் அதிகமான நீரடக்கம் உள்ளதால் இது சருமத்தை எப்போதும் ஈருப்பதத்துடன் வைத்திருக்க வேண்டும்.இந்த பழத்தின் மூலம் கிடைக்கும் பொட்டாசியம் மனித சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் பெலிவை தருகிறது.
கிவி ஒரு முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இது நம் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய நன்மைகளை அளிக்கிறது. இந்த பழுப்பு நிற பழம் இனிப்பு சுவையுடன் புளிப்பை அளிக்கக் கூடியது.
இந்த பழத்தில் விட்டமின் சி, விட்டமின் கே, விட்டமின் ஈ, போலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது.கிவியில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை சரும செல்களுக்கு ஊட்டமளிக்கவும், உள்ளிருந்து பளபளப்பை அதிகரிக்கவும் உதவுகின்றன.