நமது உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் நன்மை தரும்.ஆரோக்கியமாகவும் அழககாகவும் இருப்பது யாருக்குத்தான் பிடிக்காது. அது நமது உணவுப்பழக்கத்தில் தான் உள்ளது. அந்த வகையில் நட்ஸ் வகைகள் எந்த அளவில் நமது உடலுக்கு உதவி செய்கிறது என்பதை நம்மால் பரிந்துகொள்ள முடியும்.நட்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்களின் வளமான மூலமாகும். அவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும். இது புற்றுநோய், நீரிழிவு, மூட்டுவலி போன்ற நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். நட்ஸ் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இத்தனை சத்துக்கள் நிறைந்த நட்ஸை வெறுமையாக சாப்பிடாமல் அதை ஒரு ரெசிபியாக சாப்பிடுவதால் எமது உடல் அழகாக இருப்பதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும். அதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள் பாதாம் – 6 (ஊறவைத்து தோல் நீக்கியது) கடலை – ஒரு கைப்பிடியளவு முந்திரி – 6 பிஸ்தா – 6 வால்நட் – 1 தர்ப்பூசணி விதைகள் – ஒரு ஸ்பூன் பரங்கிக்காய் விதைகள் – ஒரு ஸ்பூன் அத்திப்பழம் – 2 பேரிச்சை பழம் – 2 பால் – ஒரு டம்ளர் வாழைப்பழம் ஒரு பாத்திரத்தில் முந்திரி, பாதாம், பிஸ்தா, கடலை, வால்நட், தர்ப்பூசணி விதைகள், பரங்கிக்காள் விதைகள், அத்திப்பழம், பேரிச்சை பழம் என அனைத்தையும் சேர்த்து அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் இரவே ஊறவைத்துவிடவேண்டும். பின்னர் அடுத்த நாள் காலை அதை அப்படியே எடுத்துக்கொள்ளவேண்டும். அதனுடன் வாழைப்பழத்தை உரிந்து நறுக்கியும், பாலும் சேர்த்துக்கொண்டு மிக்ஸியில் நன்றாக அடிக்கவேண்டும். சூப்பர் சுவையான ஸ்மூத்தி தயார். இதை காலையில் ப்ரேக் ஃபாஸ்ட்டுக்கு பதில் பருகிவந்தால், உங்கள் உடலில் எந்த நோய்களையும் சேரவிடாமல் அடித்து விரட்டும். இதில் சேர்க்கப்படும் நட்ஸ்கள் உடலுக்கு தேவையான நன்மைகளைக் கொடுக்கிறது. விதைகள் உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்களை சமப்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு நோய் என்ற ஒன்றே ஏற்படாமல் காக்கிறது. இது உச்சி முதல் பாதம் வரை உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. இந்த ஸ்மூத்தியை பருகுவதால் உங்களுக்க வயிறு நிறைந்த உணவு தரும். அதனால் உங்களுக்கு மதியம் வரை பசி ஏற்படாது. எனவே நீங்கள் அடிக்கடி ஏற்படும் பசிக்கு அவ்வப்போது இடையில் ஸ்னாக்ஸ் சாப்பிட்டு, உங்கள் உடல் எடையை அதிகரிக்க தேவையில்லை.

தற்போது இருக்கும் அவசர வாழ்க்கை முறையால் தினமும் ஒரு புது பிரச்சினைக்கு முகங் கொடுத்து வேண்டியிருக்கிறது.
என்ன நடந்தாலும் உடல் ஆரோக்கியம் மீது அதிக கவனம் எடுக்க வேண்டும்.
மாறாக உடல் ஆரோக்கியமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்க வேண்டும் என்றால் நாம் சில பயிற்சிகளை செய்யலாம்.
அதில் இந்தியளவில் பிரபலமாக இருக்கும் பயிற்சி தான் யோகா. இதனை பிரபலங்கள் பலர் செய்து வருகிறார்கள்.
யோகாசனம் உடலை சிலிம்மாகவும், பார்ப்பதற்கு கட்டுகோப்பாகவும் வைத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.
அந்த வகையில் யோகா கற்பிக்கும் நிபுணர் ஒருவர் யோகாசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றி பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.
அத்துடன் தலைமுடி பிரச்சினைகளையும் முகத்தில் இருக்கும் சிறுசிறு பிரச்சினைகளையும் யோகா செய்வதால் கட்டுபடுத்தலாம் என கூறுகிறார். இது தொடர்பான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.