இலங்கையர்களுக்கு வரும் அனாமதேய அழைப்புகள் ; பொலிஸார் எச்சரிக்கை
தமிழர் பகுதியில் பாரிய விபத்து ; தலை துண்டிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த பெண்

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த சொகுசு பேருந்துடன் உந்துருளி மோதி விபத்திற்குள்ளானதில் பெண்ணொருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இராஜாங்கனைப் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபத்தில் உயிரிழந்ததாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நொச்சியாகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நொச்சியாகம பகுதியில் உந்துருளி மீது சொகுசு பேருந்து மோதியதுடன், அதில் பயணித்த கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் விபத்திற்குள்ளாகினர்.
உந்துருளியின் பின்னால் இருந்த பெண், பேருந்தின் சில்லுகளில் நசுங்கிய நிலையில் தலை துண்டிக்கப்பட்டதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த பெண் தனது கணவருடன் உந்துருளியில் நொச்சியாகம நகரை நோக்கிப் பயணித்த போது விபத்துக்குள்ளானதாகவும், விபத்தில் கணவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சாரதி நொச்சியாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.