ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கையில் உள்ள மூன்று பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுட்டுள்ளது.
பல்கலைக்கழக உபவேந்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகங்களில் போதைப் பொருள் பாவனை மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இன்மை என்பன அதிகரித்துள்ளதால் இந்த பாதுகாப்பு அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.