புகையிரத கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை: பெற்றோருக்கு நேர்ந்த கதி!

அண்மையில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி இரவு பயணித்த புகையிரத கழிவறையினுள் பச்சிளம் கைக்குழந்தை ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டது.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (10-03-2023) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளில் குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
குழந்தையின் தாய் பண்டாரவளை பகுதியை சேர்ந்த 25 வயதுடையவரெனவும், தந்தை கொஸ்லந்தை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவரெனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறான நிலையில், கைது செய்யப்பட்ட குழந்தையின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் (15-03-2023) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேயிடம் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.