முல்லைத்தீவில் மீனவனை மரத்தில் கட்டி வைத்து சித்திரவதை செய்த கும்பல்!

முல்லைத்தீவு – கொக்குளாய் கருநாட்டக்கேணியில் கடற்கரையில் கரைவலைத் தொழிலில் இருந்து தப்பிச் சென்றார் எனத் தெரிவித்து அங்கு பணியாற்றிய மீனவர் ஒருவரை கட்டி வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்.
கருநாட்டுக்கேணியில் தென்னிலங்கையர் நடத்தும் தொழிலில் பணியாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒர் இளைஞர் பணி செய்ய விருப்பம் இன்றி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இவ்வாறு வெளியேறிய இளைஞரை விரட்டிப் பிடித்து மரத்தில் கட்டி வைத்ததோடு அதில் இருந்தும் தப்பிக்காத வண்ணம் வலையினாலும் கட்டியுள்ளனர்.
இவ்வாறு கட்டப்பட்ட இளைஞர் காலை முதல் மாலைவரை கொழுத்தும் வெய்யிலிலும் காணப்பட்டுள்ளார்.