யாழ்.போதனா வைத்தியசாலையின் சாதனை; வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி பெருமிதம்!
யாழில் எலி கடித்த உணவுப் பொருள் விற்பனை!

யாழில் எலி கடித்த உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
யாழ்.சாவகச்சோி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த புதன் கிழமை பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மட்டுவில் சரசாலை ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், பலசரக்கு கடைகள் சோதனையிடப்பட்டிருந்தது.
இதன்போது மட்டுவில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எலி கடித்த உணவுப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த உணவக உரிமையாளர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 5 வர்த்தக நிலையங்களில் கண்டுபிடிக்கப்பட்ட காலாவதியான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.