வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நன்மை
இலங்கையில் கடந்த முதல் ஆறு மாதங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை 1.56 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 77 சதவீதம் அதிகமாகும். ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சரிந்த போதிலும், சுற்றுலாத் துறை 151.1 மில்லியன் டொலர் ஈட்டியுள்ளது.
2023ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 23 சதவீத அதிகரிப்பாகும்.
இதேவேளை, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது.
ஜூன் மாதத்தில், 113,470 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். மேலும் மே மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்த 112,128 சுற்றுலா பயணிகளிடம் இருந்து 154.0 மில்லியன் டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளன.
வருட இறுதிக்குள் சுமார் 2.4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலங்கை எதிர்பார்த்துள்ளது.
மொத்த வருமானம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் 4.0 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.