புத்தளத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட அசம்பாவிதம்

புத்தளம் – குருனாகல் பிரதான வீதியின் 2ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுரைச்சோலை அனல் மின்னிலையத்திற்குச் சொந்தமான கெப் வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெப் வண்டியினை நிறுத்துவதற்கு முற்பட்ட வேலையிலே மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பின்னால் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குடிபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியதமையினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.